கேளிக்கை

இந்த அம்மணி எவ்வளவு சம்பளம் கேட்கிறார் தெரியுமா?

(UDHAYAM, CHENNAI) – கார்த்தியை வைத்து காஷ்மோரா என்ற படத்தை இயக்கியதால் கோகுல் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த சில நடிகர்கள் பின்வாங்கிவிட்டனர்.

எனவே விஜய்சேதுபதியை அணுகி தன்நிலையை சொன்னார் கோகுல். கதையைக் கூட கேட்காமல் அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் விஜய்சேதுபதி.

இதை வைத்தே விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்து ஒரு படத்தை கோகுல் இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகின.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தொடர்ந்து மீண்டும் கோகுலும், விஜய்சேதுபதியும் இணையவிருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க ஐந்து மாதங்களாகும்.

அதாவது, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படங்களில் ஒரு சில படங்களின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என்றும் இதனை தொடர்ந்து கோகுல் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

அதற்குள் ஸ்கிரிப்ட் வேலைகளை இறுதிசெய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இன்னொரு பக்கம், இப்படத்தின் கதாநாயகி கேரக்டருக்கு எமி ஜாக்சனிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார் கோகுல்.

விஜய்சேதுபதி ஹீரோ என்பதால் இந்த படத்தில் நடிக்க எமி ஜாக்சன் ஒப்புக்கொண்டுள்ளார். அதே சமயம் சம்பள விவரங்களை தன் மெனேஜரிடம் பேசிக்கொள்ளும்படி சொல்லி இருக்கிறார்.

ரஜினியின் படத்தில் நடித்து முடித்துவிட்ட எமி ஜாக்சன் வேறு படங்கள் இல்லாமல் இப்போது சும்மாதான் இருக்கிறார். எனவே சின்ன சம்பளத்துக்கு நடிக்க ஒப்புக்கொள்வார் என்ற அடிப்படையிலேயே எமியை அணுகியுள்ளனர்.

ஆனால் எமியோ ஒன்றரை கோடி சம்பளம் வேண்டும் என்று சொன்னாராம் கூலாக. அந்த அதிர்ச்சியிலிருந்து கோகுல் இன்னும் மீளவில்லையாம்.

Related posts

என் வழி தனி வழி.. ஒரு விடியோவில் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த யுவராஜ்

செபரமடு லசித் மாலிங்க பற்றிய சுவாரிசியமான அந்த பத்து விஷயம்

துல்கரின் ‘குருப்’ டீசர் [VIDEO]