வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|INDONESIA)-இந்தோனேசியா நாட்டின் டெர்னட்டே நகரின் அருகே இன்று அதிகாலை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெர்னட்டே நகரில் வடக்கே-வடமேற்கே 175 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாக பதிவானது.

இன்றையை நிலநடுக்கத்தால் உண்டான சேதம் மற்றும் இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

இடிந்த சிறையில் இருந்து தப்பிய கைதிகள்…

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை

Russia – China joint air patrol stokes tensions