வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் மீண்டும் நிலடுக்கம்…

(UTV|INDONESIA)-இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த வெள்ளியன்று 7.5 ரிக்டரில் நிலநடுக்கமும், 170 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமி தாக்கியது.

இந்த இயற்கை பேரழிவுகளால் இந்தோனேசியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது. இயற்கையின் இந்த கோர தாண்டவத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, தேவாலயம் ஒன்றின் இடிபாடுகளில் சிக்கியிருந்த மாணவர்கள் 36 பேரின் சடலங்களை மீட்புக்குழுவினர் இன்று மீட்டுள்ளனர். கடுமையாக பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் இந்தோனேசியாவுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு சர்வதேச நாடுகளுக்கு அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சும்பா எனும் தீவில் 40 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Australian swimmer refuses to join rival on podium

ஒரே நேரத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்த சோகம்

வாகன இறக்குமதி தொடர்பில் நிதியமைச்சின் எதிர்வுகூறல்!