உள்நாடு

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; பலியானோர் 318 ஆக அதிகரிப்பு

(UTV | ஜகார்த்தா) –     இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 318 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

 

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் கடந்த திங்கட்கிழமை 5.6 அளவில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட பல கட்டிங்கள் இடிந்து விழுந்து பலத்த சேதமேற்பட்டுள்ளதுடன் இதில் 162 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டன. 700-க்கும் கூடுதலானோர் காயம் அடைந்துள்ளனர்.
இதேவேளை இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்துமேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் கடந்த புதன்கிழமை காலை இடிபாடுகளில் இருந்து மேலும் 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 318 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாயமான 20 பேரை தேடி வருவதாக தேசிய பேரிடர் மீட்பு கழகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்க பகுதிகளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ விஜயம் செய்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஜும்ஆத் தொழுகைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

சைபர் தாக்குதல் – அச்சுத் திணைக்களத்தின் இணையத்தளமும், பொலிஸாரின் யூடியூப் சேனலும் மீட்டெடுக்கப்பட்டது

editor

பொலிஸாரை தாக்கிய பாடசாலை மாணவர்கள் – கைது.