(UTV | இந்தோனேசியா) – இந்தோனேசியா கடற்கரையில் இன்று(07) 6.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய ஜாவாவின் படாங் (Batang) பகுதியில் இருந்து 90 கிலோ மீற்றர் வடக்கே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி இன்று காலை காலை 9 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
700 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பாலியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சமூக ஊடக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் சக்திவாய்ந்ததாக இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 450 எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.