வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவின் பபுவாவில் கடும் மழை – 42 பேர் உயிரிழப்பு

(UTV|INDONESIA) இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இன்னும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

Chief Justice summoned before COPE

மஹிந்தாநந்தவிற்கு பிணை

ஜமால் கசோக்கி சவுதி அதிகாரிகளால் திட்டமிட்டு கொலை