கேளிக்கை

இந்தி சூப்பர்ஸ்டார் அமீருக்கும் கொரோனா

(UTV | இந்தியா) – பிரபல இந்தி நடிகர் அமீர்கானுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கோடி கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திரைப்பட பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். முன்னதாக அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர் உள்ளிட்ட நடிகர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அமீர்கான் தன்னிடம் பணிபுரிந்தவர்களையும் கொரோனா சோதனை செய்து கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தி வருகிறாராம். ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் இந்தி ரீமேக்கான லால் சிங் ச்சதா படத்தில் அமீர்கான் நடித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா உறுதியானதால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Related posts

சர்கார்’ படத்தில் இருந்து `சிம்டாங்காரன்’ ரிலீஸ்…-(VIDEO)

நடிகைகளுக்கு ஆயுள் குறைவு : சமந்தா

சமந்தா முத்தத்துக்கு ரூ.10 லட்சம்