உள்நாடு

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய இருதரப்பு உதவிகள் தொடர்பிலான ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.

இந்திய நிதி அமைச்சின் பொருளாதார விவகாரங்கள் திணைக்களத்தின் செயலாளர் அஜய் சேத், இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி. ஆனந்த நாகேஸ்வரன் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் இணைச் செயலாளர் கார்த்திக் பாண்டே ஆகியோர் இந்த விஜயத்தின் போது வெளியுறவு செயலாளருடன் இணைந்து வருகை தந்துள்ளனர்.

இந்த விஜயத்தின் போது இந்தியத் தூதுக்குழுவினர் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவுள்ளனர். நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் குறுகிய கால மற்றும் நீண்ட கால உதவித் தேவைகள் குறித்து தூதுக்குழுவினர் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவர்.

Related posts

துறைமுக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தம்

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் – அமெரிக்கா நம்பிக்கை.

ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டத்தில் திருத்தம்