உள்நாடு

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரையும் அவர் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த உத்தியோகபூர்வ விஜயமானது, 2021 ஆம் ஆண்டில் வெளிநாட்டு உயர்மட்ட பிரமுகர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக அமையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயர்தரம் – புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு

போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சகல விமான நிலையங்களும் இன்றிரவு திறக்கப்படும்