உலகம்

எயார் இந்திய விமானம் 324 பயணிகளுடன் தரையிறக்கம்

(UTV|இந்தியா) – வுஹானில் இருந்து 324 பயணிகளுடன் எயார் இந்திய விமானம் டெல்லியில் தரையிறங்கியுள்ளது. 

எயார் இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று நேற்று(31) சீனாவின் வூஹான் பிராந்தியத்துக்கு புறப்பட்டுச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வூஹான் பிராந்தியத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக குறித்த விமானம் சீனாவை நோக்கி நேற்று பகல் பயணித்துள்ளதுடன், இந்த விமானத்தில் 400 பயணிகளை அழைத்துவரும் வசதிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த விமானத்தில் 5 வைத்தியர்களும் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஓமான் நாட்டிற்கு புதிய அரசர் நியமனம்

கோவாக்சின் தடுப்பூசிக்கு ஹாங்காங் அரசும் ஒப்புதல்

வீதி தாழிறங்கியமையால் 6 பேர் பலி