வகைப்படுத்தப்படாத

இந்திய மீனவர்கள் 3 பேர் விடுதலை

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 3 பேர் நேற்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

காங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள கடலில் இலங்கை கடற்படையின் வீரர்கள் இந்த மீனவர்களை இந்திய அதிகாரிகளிடம் கையளித்ததாக கடற்படை அறிவித்துள்ளது. கடற்படையைச் சேர்ந்த அதிவேக தாக்குதல் கடற்கலத்தின் மூலம் இந்திய மீனவர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள்.

கடற்படையினர் இதுவரை 38 மீனவர்களை இந்திய அதிகாரிகளிடம் மீள ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தொடரூந்து விபத்துக்களில் இருவர் பலி

பலத்த காற்றுடன் கூடிய மழை

Daniel Craig returns to “Bond 25” set in UK