வகைப்படுத்தப்படாத

இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக எதிர்வரும் ஏப்ரல் முதல்

(UTV|INDIA) இந்திய பாராளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை இடம்பெறவுள்ளதாக, இந்திய தேர்தல் ஆணைகுழுவின் தலைமை ஆணையர் சுனில் அரோரா நேற்று மாலை அறிவித்துள்ளார்.

அங்குள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ம் திகதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும், 2ம் கட்ட வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 18ம் திகதி 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கும் நடைபெறவுள்ளன.

3ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் திகதி 14 மாநிலங்களில் 115 தொகுதிகளுக்கும் 4ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ம் திகதி 9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கும் இடம்பெறவுள்ளன.

இவ்வாறு ஏழு கட்டங்களாக 543 தொகுதிகளுக்கும் தேர்தல் இடம்பெறவுள்ளன.

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18ம் திகதி வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, தமிழக சட்டசபையில் வெற்றிடமாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அன்றைய தினமே நடைபெறவுள்ளது.

அதனை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் மே 23ம் திகதி இடம்பெறவுள்ளன.

பாரளுமன்ற தேர்தலை பொருத்தவரை சுமார் 90 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் எனவும் இந்திய தேர்தல் ஆணைகுழுவின் தலைமை ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்கு பதிவுகளுக்காக 10 லட்சம் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 17.4 லட்சம் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால வரையரை எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பமாகி மார்ச் 26 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

 

 

 

 

Related posts

Annette Roque officially calls it quit with husband Matt Lauer

பலா மரத்தில் ஏறியவர் குளவி கொட்டுக்கு இழக்கு

காலி மாவட்டத்தில் 12 பேர் உயிரிழப்பு