உலகம்

இந்திய – சீன எல்லை மோதல் – இந்திய இராணுவத்தினர் 20 பேர் பலி

(UTV|கொழும்பு) – லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன இராணுவத்தினரிடையேநடந்த மோதலில் உயிரிழந்த இந்திய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய இராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்றிரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த மோதலில் படுகாயமடைந்த மேலும் 17 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இதனால் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய இராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள சீன தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகளுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதை மத்திய உளவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

whatsapp இல் புதிய வசதி அறிமுகம்

பிரான்ஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி – கவிழ்ந்தது ஆட்சி

editor

ஈரானின் தாக்குதல் மிரட்டலில் இஸ்ரேல் உஷார் நிலையில்…!