உலகம்

இந்திய-சீன எல்லையில் மோதல் – இந்திய இராணுவ வீரர்கள் மூவர் உயிரிழப்பு

(UTV|இந்தியா)- லடாக் எல்லையில் சீன இராணுவம் நடத்திய தாக்குதலில் 3 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மாதம் 5 ஆம் திகதி இந்திய படைகளும் சீன படைகளும் மோதிக்கொண்டன. இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவி வந்தது.

பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், லடாக் எல்லைப் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா-சீன படைகள் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதில், இந்திய இராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

சீனா சவகாசம் : எரிந்தது நாடாளுமன்றம்

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்பு