விளையாட்டு

இந்திய கிரிக்கட் வீரர்களின் வேதனம் உயர்வு!!

(UDHAYAM, COLOMBO) – இந்திய கிரிக்கட் வீரர்களுக்கான வேதன ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி செட்டிஸ்வார் புஜாரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் முரளி விஜய் ஆகியோர் ‘ஏ’ தரத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு இந்த ஆண்டு முதல் 2 கோடி இந்திய ரூபாய்கள் வேதனமாக வழங்கப்படும்.

‘ஏ’ தரத்தில் விராட் கோலி, எம்.எஸ். தோனி, அஷ்வின், அஜன்க்யா ரஹானே ஆகியோரும் உள்ளனர்.

ஒரு கோடி இந்திய ரூபாய் வேதனத்துக்கான ‘பி’ தரத்திற்கு லோகேஸ் ராகுல் மற்றும் விரிதிமன் சஹா ஆகியோர் உயர்த்தப்பட்டுள்ளனர்.

ரோஹித் சர்மா, புவனேஷ்வர் குமார், மொஹமட் சமி, இசாந்த் சர்மா, உமேஸ் யாதவ், ஜஸ்ப்ரிட் பம்ரா, யுவராஜ் சிங் ஆகியோரும் இந்த குழுவிலேயே உள்ளடக்கப்படுகின்றனர்.

சிக்கார் தவான், அப்பத்தி ரய்டு, அமித் மிஷ்h, மனிஸ் பண்டே, அக்சார் பட்டேல், கருன் நாயர், ஹர்டிக் பாண்டியா, அஷிஸ் நெஹ்ரா, கேதார் ஜாதவ், யுஸ்வெந்தரா சஹால், பார்த்திவ் பட்டேல், ஜயந்த் யாதவ், மந்தீப் சிங், தவால் குல்கர்ணி, சர்துல் தாகூர் மற்றும் ரிசாப் பான்ட் ஆகியோர் 50 லட்சம் இந்திய ரூபாய் வேதனத்துக்கு உரிய ‘சீ’ தரத்துக்கு உட்பட்டுள்ளனர்.

Related posts

136 ஓட்டங்களால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கைக்கு

ஸ்டீவ் ஸ்மித்திற்கு மேலும் ஒரு அதிர்ச்சி?