உள்நாடு

இந்திய கடிதம் குறித்து – சுமந்திரன் பதில் சொல்ல வேண்டும்.

(UTV | கொழும்பு) –

இந்திய பிரதமரிடம் கடிதம் சென்றடைந்தது என்பதனை சுமந்திரனுக்கு நன்றாக தெரிந்து இருக்கும் எனில் எதற்காக இந்திய பிரதமர் அந்த கடிதத்திற்குரிய பதிலை அனுப்பவில்லை என்ற கேள்விக்கும் சுமந்திரனே பதில் சொல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனக்கு தெரிந்த வரையில் இந்திய பிரதமருக்கு தமிழ் கட்சிகள் அனுப்பிய கடிதமானது இன்னும் சென்றடையவில்லை என்று தகவல் கிடைத்தன. இந்திய பிரதமரிடம் கடிதம் சென்றடைந்தது என்பதனை சுமந்திரனுக்கு நன்றாக தெரிந்து இருக்கும் எனில் எதற்காக இந்திய பிரதமர் அந்த கடிதத்திற்குரிய பதிலை அனுப்பவில்லை என்ற கேள்விக்கும் சுமந்திரனே பதில் சொல்ல வேண்டும். சுமந்திரன் சொல்வதுபோல் கடிதம் இந்திய பிரதமரிடம் சென்றடைந்திருந்தால் அதற்குரிய பதில் கடிதத்தினை இந்தியப் பிரதமர் அனுப்பாததற்கு ஏதேனும் காரணம் ஒன்று இருக்க வேண்டும்.

எனனிடம் சொல்லப்பட்டதுஎன்னவெனில் அது ஒரு இடத்தில் தேங்கி நிற்பதாகவும் பிரதமரிடம் சென்றடையவில்லை எனவும் கூறப்பட்டது.
இந்தியப் பிரதமருடைய காரியாலயத்திற்கு செல்லும் கடிதங்கள் யாவற்றிற்கும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பதில் எழுதப்படும் எனக் கூறப்பட்டது. அவ்வாறான பதில் வராததை வைத்துதான் இந்தியப்பிரதமருக்கு தமிழ்க் கட்சிகள் அனுப்பிய கடிதம் சொல்லவில்லை என சொல்ல வேண்டி ஏற்பட்டது. மேலும் சிகிச்சை சுமந்திரனுக்கும் தேவைப்படலாம் எனக்கும் தேவையாக இருக்கலாம். நாங்கள் எல்லோரும் மனதால்பிரச்சினை பட்டவர்கள் தானே, ஆசிரியரும் மாணவரும் என நானும் சுமந்திரனைம் இணைந்து சிகிச்சை பெறவேண்டிய அவசியம் இருக்கும் போல தெரிகிறது எனத் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடவுச்சீட்டு வரிசை மேலும் நீடிக்கலாம் | வீடியோ

editor

இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள் உலக சந்தையின் சக்திகளாலேயே தீர்மானம்

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்தது