வகைப்படுத்தப்படாத

இந்திய கடற்றொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய தேவை இலங்கை கடற்படைக்கு இல்லை – கடற்படைத் தளபதி

(UDHAYAM, COLOMBO) – இந்திய கடற்றொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய தேவை இலங்கை கடற்படைக்கு இல்லை என கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவில் நேற்று இடம்பெற்ற புனித அந்தோனியார் ஆலய திருவிழா நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினர், இந்திய கடற்றொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்திய கடற்றொழிலாளர்கள் இந்த முறை கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்ள வில்லை.

இந்திய- இலங்கை கடல் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை கடல் எல்லையில், அத்துமீறுபவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அத்துமீறுகின்றனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டுமாயின், அதற்கு கடற்படை தளபதியின் அனுமதி பெறப்பட வேண்டும்.

எனினும், தம்மிடமிருந்து அவ்வாறான எந்தவொரு அனுமதியும் பெறப்படவில்லை என கடற்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கடற்படையின் முக்கிய அதிகாரிகள் தலைமையிலான குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற தினத்தில், 400 இற்கும் 500 இற்கும் இடைப்பட்ட படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறியுள்ளமை ராடார் கருவியின் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட படகின், குறித்த படகு பயணித்த இடம் மற்றும் அது தொடர்பான தகவல்கள் ஜீ.பி.ஆர்.எஸ் தொழில்நுட்ப தகவல்கள் மூலம் தமக்கு பெற்றுக்கொடுக்குமாறு இந்தியாவிடம் கோரப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில், குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related posts

බහුදින ධීවර යාත්‍රා 44ක් ඉන්දීය හා මාලදිවයින් මුහුදු ප්‍රදේශ දෙසට

எதிர்ப்புக்கு மத்தியில் சமர்பிக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு

ஒருவர் மட்டுமே வசிக்கும் நகரம்?