வகைப்படுத்தப்படாத

இந்திய கடற்தொழிலாளர்கள் 77 பேர் இன்று ஒப்படைப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் 77 பேரை இன்று இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையின் ஊடக பேச்சாளர் லுதினல் கமான்டர் சமிந்த வலாகுலுகே இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் பத்தாம் திகதியின் பின்னர் கைதுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களே விடுவிக்கப்படவுள்ளனர்.

இவர்களை அழைத்துச் செல்வதற்காக இலங்கையின் வடக்கு கடற் பரப்பு எல்லைக்கு இரண்டு இந்திய கடற்படை படகுகள் வருகைதரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட சுமார் 55 கடற்தொழிலாளர்கள் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Malinga seals Sri Lanka win in his Final ODI

President says his life under threat

மழையுடன் கூடிய காலநிலை