கட்டுரைகள்

இந்திய இராணுவம் கற்பழிப்பை பழிவாங்கும் கருவியாகப் பயன்படுத்துகிறது

(UTV | இந்தியா) – உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாகவும், மிக பண்டைய நாகரிகங்களில் ஒன்றின் உரிமையாளராக இருப்பதாகக் கூறினாலும், இந்தியா பாதிப்புக்கு உள்ளாகும் தனது சொந்த மக்களைக் கூட மிருகத்தனமாகவே எப்போதும் நடத்தி வருகிறது.

இந்திய அரசியலமைப்பு மதச்சார்பற்ற தன்மை என்று அழைக்கப்பட்டாலும், ஒரு சாதியின் மேலாதிக்கத்தில் வேரூன்றிய வர்க்க வெறுப்பு, இன்னமும் இந்திய அரசியலமைப்பில் காணப்படுகிறது.

பிராமணர்கள் போன்ற உயர்ந்த மற்றும் உன்னதமான பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஷுத்ராஸ் மற்றும் தலித்துகள் போன்ற தாழ்ந்தவர்களை வழிநடத்தும் தாழ்வு முறைமை உலகறிந்த விடயமே.

1988/89 இன் காஷ்மீர் சுதந்திர போராளிகளின் ‘இன்திபாழா ‘ (எழுச்சி) முதல், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சமூகம் என்றால் அது இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரின் முஸ்லிம் சமூகமே. இந்தியாவின் உயர்ந்த இந்து பெரும்பான்மையினரின் கூற்றுப்படி, ஜம்மு-காஷ்மீரின் முஸ்லிம் சமூகம் வெறுக்கப்படுவதற்கும், பாதிக்கப்படுவதற்கும், அவர்கள் செய்த குற்றம் என்னவென்றால், அவர்கள் முஸ்லிம்கள் மற்றும் பாகிஸ்தான் மீதான அவர்களின் அன்பே ஆகும். மீண்டும் மீண்டும் இந்திய அரசாங்கங்கள், பாகிஸ்தானை தங்கள் எதிரியாகவே பார்க்கின்றன. இப்போதைய நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) சமூக மற்றும் வர்க்க வெறுப்பைத் தூண்டுவதில் அனைத்து வரம்புகளையும் தாண்டி செயற்படுகிறது.

பாஜகவின் போர் வெறி மற்றும் வன்முறைகள் என்ற தலைப்பில் இவை அனைத்தும் எழுதித் தொகுக்கப்பட வேண்டும். உண்மையில், வன்முறை என்பது அடக்குமுறையின் ஒரு கருவியாகவே இன்னும் உலகத்தில் மாறாது இருந்து வருகிறது.

எவ்வாறாயினும், மிகவும் நாகரிகமான, மிகவும் சகிப்புத்தன்மையுள்ள உலகில் இந்தியா ஒரு வித்தியாசமான நாடு ஆகும். இந்தியாவில் சமத்துவத்தை தேடும் இந்து அல்லாதவர்களை மிருகத்தனமாக அடக்குவதற்கான அதன் தலைவர்களின் நோக்கம் , பலம்பொருந்திய சிக்கலான அதன் இந்து ஆட்சியுடன் இணைந்த ஒன்றாகும்.

முஸ்லிம் பெரும்பான்மையைச் சேர்ந்த காஷ்மீர் பள்ளத்தாக்கின் சுதந்திரப் போராளிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.

சிந்தனைக்கு எட்டக்கூடிய மற்றும் சிந்தனைக்கு எட்டாத அனைத்து கொடூரமான அடக்குமுறை கருவிகளும் ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) போன்ற கறுப்புச் சட்டங்களின் ஆதரவுடன் பயன்படுத்தப்படுகின்றன. இது இந்திய வீரர்களுக்கு இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள எந்தவொரு இடத்துக்கும் தேடல் வாரண்ட் இல்லாமல் நுழைய அங்கீகாரம் அளிக்கிறது.

வெவ்வேறு அரசியல் கட்சிகளின் அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தில் இது நடந்து வருகிறது. அப்பாவி காஷ்மீரிகளை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தாமல் நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்க இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு மேலதிக நீதித்துறை அதிகாரங்களை வழங்கும் பொது பாதுகாப்பு சட்டம் (பி.எஸ்.ஏ) உள்ளிட்ட பிற கருப்பு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

சக்திவாய்ந்த போர் உபகரணங்களை கொண்ட சுமார் 300 இந்திய இராணுவ வீரர்கள், குனான் மற்றும் போஷ்போரா கிராமங்களில் 150 முஸ்லீம் காஷ்மீரி சிறுமிகளை ஒரு தேடல் நடவடிக்கையின் போது மிருகத்தனத்தனமாக கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட காஷ்மீர் பள்ளத்தாக்கில், 0.7 மில்லியன் வழக்கமான இராணுவம் மற்றும் 0.4 மில்லியன் துணை இராணுவ வீரர்களைக் கொண்டுள்ள பாரிய இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்படும் மிருகத்தனமான செயல்களை உலகம் இன்னும் மறக்கவில்லை.

உண்மையில், கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை ஆகியவை அடக்குமுறையின் முக்கிய கருவிகளில் சிலவாகும். யு.என்.எஸ்.சி தீர்மானங்களின்படி சுயநிர்ணய உரிமையை கோரும் அமைதியை நாடும் நிராயுதபாணியான காஷ்மீர் முஸ்லிம்களை அடிபணியச் செய்வதற்கும் அவமானப்படுத்துவதற்கும் மீண்டும் மீண்டும் இந்தியா கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளை மேற்கொண்டு வருகிறது.

சில சமயங்களில், சுதந்திரத்திற்குப் பிறகு காஷ்மீரில் மோதல்கள் வெடித்தபோது அவர்களைப் பின்பற்ற இந்து கும்பல்களைத் தூண்டிய , காஷ்மீரி முஸ்லிம் பெண்களுக்கு எதிராக வெகுஜன பாலியல் பலாத்காரங்கள் செய்த காஷ்மீரின் டோக்ரா துருப்புக்களின் அடிச்சுவடுகளை இந்திய துருப்புக்கள் பின்பற்றுவது போல் தெரிகிறது.

பல அறிஞர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் “இந்திய இராணுவம், மத்திய ரிசர்வ் பொலிஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் எல்லை பாதுகாப்புப் பணியாளர்கள் அடங்கிய இந்திய பாதுகாப்புப் படையினரால் “கற்பழிப்பு” போரின் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது ” என்று கூறுகின்றனர்.

மேலும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, “இந்தியப் படைகள் கற்பழிப்பை பழிவாங்கும் முறையாகவும், காஷ்மீர் குடிமக்களுக்கு எதிரான கிளர்ச்சி நடவடிக்கையாகவும் பயன்படுத்துகின்றன” என்று குறிப்பிடுகின்றது.

எவ்வாறாயினும், இந்தியாவின் பாரிய பொருளாதார அந்தஸ்தின் காரணமாக உலகளாவிய நாடுகள் இந்த மிருகத்தனமான செயல்களிற்கு ஒரு அமைதியான பார்வையையே காட்டுகின்றன. ஆனால்,இதுபோன்ற மிருகத்தனங்களால் காஷ்மீர் சுதந்திர போராளிகளின் தைரியம் ஒருபோதும் குறையப்போவதில்லை என்பது உறுதி.

மூலம் : மியான் சைபூர் ரெஹ்மான் (ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர்)

Related posts

மக்களை குழப்பி நாட்டை நாசம் செய்ய வேண்டாம் – எதிர் கட்சித் தலைவரை சாடிய டயானா கமகே

புனிதப் போருக்குள் சமூகச் சாயம்

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு இலங்கை அரசின் கட்டாய அறிவிப்பு !