விளையாட்டு

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சஹீர் கான் நியமனம்!

(UDHAYAM, COLOMBO) – இந்திய அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக ராகுல் டிராவிட்டும், பந்துவீச்சு பயிற்சியாளராக சஹீர் கானும் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கட் அணி தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார்.

தலைவர் கோஹ்லிக்கும் அவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக, கும்ப்ளே பயிற்சியாளர் பணியிலிருந்து விலகினார்.

இதையடுத்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, வீரேந்திரசேவாக், டாம்மூடி, பில் சிம்மன்ஸ், ரிச்சர்ட் பைபஸ் மற்றும் லால்சந்த் ராஜ்புட் ஆகியோர் விண்ணப்பித்தனர்.

இவர்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிசிசிஐயின் பொறுப்பு தலைவர் சிகே கன்னா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் வீரர் சஹீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் துடுப்பாட்ட ஆலோசகராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு மட்டும் டிராவிட் துடுப்பாட்ட ஆலோசகராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரான ராகுல் டிராவிட் தற்போது, 19 வயதுக்கு உட்பட்டோருக்குக்கான அணியின் பயிற்சியாளாரக இருக்கிறார்.

ஐபிஎல் தொடரின்போது டெல்லி அணி பயிற்சியாளராகவும் உள்ளார்.

டிராவிட்டின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் சிறந்த வீரர்களாக தங்களை நிரூபித்து வருகின்றனர்.

Related posts

சர்வதேச விளையாட்டு தடை – ரஷ்யா மேன் முறையீடு

டோனியை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் -முனாப் பட்டேல்

இரண்டாவது டி20 – இலங்கை அணிக்கு வெற்றி