உள்நாடுசூடான செய்திகள் 1

இந்தியா சென்றார் ஜனாதிபதி : ஜனாதிபதி செயலாளாரக சந்தானி -அமைச்சர்கள் நியமனம்

(UTV | கொழும்பு) –

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக சற்று முன்னர் இந்தியாவிற்கு புறப்பட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு தொடர்புகளின் 75 ஆண்டு பூர்த்தியையொட்டி இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பரஸ்பர நலன்களை ஆராயவும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதியுடன் இந்தியா செல்வதால், ஜனாதிபதியின் செயலாளராக சந்தானி விஜயரட்ன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ள

அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று  வியாழக்கிழமை (20) இந்தியா சென்றுள்ளார். இதன் காரணமாக ஜனாதிபதி வசமுள்ள அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைக்கான பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம முதலீட்டுக்கான பதில் அமைச்சராகவும், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் பதில் தொழிநுட்ப அமைச்சராகவும், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவல் பதில் மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் வரை மேற்குறிப்பிடப்பட்ட அமைச்சர்கள் அந்தந்த அமைச்சுக்களுக்கான பணிகளை முன்னெடுப்பர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சமன் ரத்னப்பிரியவுக்கு ஜனாதிபதியினால் புதிய நியமனம்

திங்கள் முதல் முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள்

ஹட்டனில் மாணவர்களும், பெற்றோரும் போராட்டம்