உள்நாடு

“இந்தியா – இலங்கை ஒத்துழைப்புக்கு வானமே எல்லை”

(UTV | கொழும்பு) – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு “வானமே எல்லை” என்று கூறுகிறார்.

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) மற்றும் இலங்கைக்கு இடையிலான பங்காளித்துவத்தின் 58வது கொண்டாட்டத்தில் உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.

ஒட்டுமொத்த இந்திய-இலங்கை ஒத்துழைப்பில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் (ITEC) முக்கியத்துவத்தை உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் ITEC வலையமைப்பு நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவதாகவும் ஒவ்வொரு வருடமும் 400 புலமைப்பரிசில்களை வழங்குவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

  பத்து மாதங்களில் இரண்டரை லட்சம் பேர் வெளிநாடு சென்றுள்ளனர்

பிரதிப் பிரதமர் பதவி குறித்து அரசு கலந்துரையாடவில்லை

‘எதிர்காலத்தில் லெபனானைப் போன்று இலங்கை மாறலாம்’