உள்நாடுசூடான செய்திகள் 1

இந்தியா- இலங்கை இடையேயான உறவு மேலும் வலுவடையச்செய்துள்ளது

(UTV|இந்தியா )- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு இந்தியா- இலங்கை இடையேயான உறவை மேலும் வலுவடையச்செய்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கு அமைய நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று புத்தகாய மற்றும் திருப்பதி உள்ளிட்ட இடங்களில் வழிபாடுகளில் ஈடுப்படவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட அரச தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தநிலையில் இந்தியா விஜயத்தை முடித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோட்டன் சமவெளியில் வண்டுகளை பிடித்த இருவர் கைது

இலங்கைக்கு வாக்குறுதி வழங்கிய சீன ஜனாதிபதி!

புத்தாண்டை முன்னிட்டு கொவிட் தடுப்புக்கான செயற்பாடுகள் மீளாய்வு