விளையாட்டு

இந்தியா அணி வெற்றி

(UTV|கொழும்பு) – நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இந்தியா அணி ஆறு விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், இந்தியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

ஒக்லாந்து- ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ஓட்டங்களை குவித்தது.

இதனைத் தொடர்ந்து 204 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணி, 19 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இந்தியா அணி ஆறு விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள்; அடங்களாக 58 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஸ்ரேயஸ் ஐயர் தெரிவு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, நாளை மறுதினம் ஒக்லாந்து- ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related posts

LPL போட்டித் தொடரின் அட்டவணை

ஷந்திமாலுக்கு ஓய்வு

2006இல் எழுதிய வரலாற்றை இலங்கை அணி மாற்றியெழுதுமா?