உள்நாடு

‘இந்தியா அசுத்தமானது’ – ட்ரம்ப் பேச்சில் சர்ச்சை

(UTV | கொழும்பு) – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து இந்தியாவை தாக்கி பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவுகள் நவம்பரில் வெளியாக உள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் ஜோ பிடன் – ட்ரம்ப் இரண்டாவது முறையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அமெரிக்காவின் சுற்றுசூழல் சீர்கேடு குறித்து ஜோ பிடன் பேசியதற்கு மறுப்பு தெரிவித்த அதிபர் ட்ரம்ப் “அடுத்த 35 ஆண்டுகளுக்குள் ஒரு ட்ரில்லியன் மரம் வளர்க்கும் திட்டம் நம்மிடம் உள்ளது. சீனாவை பாருங்கள் அது எவ்வளவு இழிவானது. ரஷ்யாவையும், இந்தியாவையும் பாருங்கள் அவை அசுத்தமானவை. அங்கு மக்கள் சுத்தமான காற்று கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்” என பேசியுள்ளார்.

இந்தியாவை தனது நட்பு நாடு என்று சொல்லிக்கொள்ளும் ஜனாதிபதி ட்ரம்ப் கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் இந்தியாவை தாழ்த்தி பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘அரபு நாடுகளின் நண்பனாகக் கூறும் இந்த அரசு, புர்காவை தடைசெய்து இனவாதிகளுக்கு இனிப்பூட்டுகிறது’

சர்வதேச ஜம்போ பீனட்ஸ் இனி இலங்கையில் இல்லை

லுனுகம்வெஹர வாகன விபத்தில் 6 பேர் உயிரிழப்பு