விளையாட்டு

இந்தியாவை வெற்றிக் கொள்ள தயாசிறியின் திட்டம்!

(UDHAYAM, COLOMBO) – சிம்பாப்வே அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டி மற்றும் இந்திய அணியுடனான போட்டித் தொடர்களில் வெற்றிப் பெற புதிய செயற்திட்டமொன்றை தயாரிக்க வேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிற ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்று இன்று இலங்கை திரும்பிய வீரர்களை விமான நிலையத்தில் வரவேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

இலங்கை கிரிக்கட் அணியில் சிறந்த திறமையுடைய வீரர்கள் இருந்த போதும் ஏதோ ஒரு துரதிஷ்டம் காரணமாக தோல்வியை எதிர்கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் , தோல்வியின் பொறுப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் , எதிர்வரும் போட்டிகளுக்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா

இருபதுக்கு – 20 உலக கிண்ண குறித்து இன்று இறுதி முடிவு

சச்சித்ர சேனாநாயக்க பிணையில் விடுதலை!