விளையாட்டு

இந்தியாவை தோற்கடித்து அவுஸ்திரேலிய ஒரு நாள் போட்டியில் வெற்றி

(UTV|INDIA) இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 35 ஓட்டங்களினால் வெற்றியீட்டி தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஐதராபாத், நாக்பூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், ராஞ்சி, மொகாலியில் நடந்த அடுத்த இரு ஆட்டங்களில் அவுஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்றன.

இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருக்க தொடரின் இறுதியும் ஐந்தாவதுமான போட்டி நேற்று  டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் ஆரம்பமாகியது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடுத்தாடுவதற்கு தீர்மானித்தது, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9  விக்கெட்டுக்களை இழந்து 272 ஓட்டங்களை பெற்றது

 

 

 

Related posts

ஆட்ட நிர்ணய விசாரணைகளுக்காக சங்காவுக்கு அழைப்பு

சந்திக ஹதுருசிங்கவை பதவி விலகுமாறு பணிப்பு

சறுக்கியது சென்னை சுப்பர் கிங்க்ஸ்