உலகம்

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை அமைச்சர்

(UTV|இந்தியா) – இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ள இத்தாலி நாட்டை சேர்ந்த 14 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும் ஆக்ராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும், டெல்லி, தெலுங்கானாவில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் கொரோன வைரஸ் காரணமாக அமெரிக்காவில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதுடன் 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளதுடன் 5,328 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Related posts

மீண்டும் ஏவுகணை சோதனையில் இறங்கிய வடகொரியா

உலக சுகாதார நிறுவனத்திற்கு காலக்கெடு

அரச மருத்துவமனையில் 111 குழந்தைகள் உயிரிழப்பு