உலகம்

இந்தியாவில் 2 மில்லியனை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

(UTV|இந்தியா) – இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை கடந்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 62,170 ஆக பதிவாகியுள்ளது.

இதன்படி, இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,027,074 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை தற்போதைய நிலவரப்படி, உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 19,260,188 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

குவைத்தில் நாளை முதல் ஊரடங்கு

நியூசிலாந்தில் அவசர நிலை பிரகடனம்!

சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு ஜூன் 30 வரை நீடிப்பு