உலகம்உள்நாடு

இந்தியாவில் கைதான ஐஎஸ் நபர்கள்: இலங்கை நண்பர் ஒருவரும் கைது

குஜராத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்களுடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் இலங்கையில் ஒருவர் பயங்கரவாத விசாரiணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குஜராத் விமானநிலையத்தில் இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர் இவர்க கைதுசெய்யப்பட்டார் விசாரணைகள் இடம்பெறுகின்றன என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இந்திய அதிகாரிகளின் விசாரணையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் விசேட குழுவொன்றை நியமித்துள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொலிஸார் பல தரப்பினரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன முகமட் நவ்;ரான் ( 27) முகமட் நுஸ்ரட் 33 முகமட் பாரிஸ் 35 முகமட் ராஸ்தீன் 45 ஆகிய நால்வரே குஜராத் விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீர்கொழும்பு மாளிகாவத்தை மட்டக்குளிய கிரான்ட்பாஸ் பகுதிகளை சேர்ந்தவர்கள்.

சந்தேகநபர்களில் ஒருவர் போதைப்பொருள் குற்றவாளி பொட்டநவ்பரின் மகன் என்பதை பொலிஸ் பேச்சாளர் உறுதிசெய்துள்ளார்

 

Related posts

ஒரு குடம் நீருக்காக 200 படிகள் ஏறி இறங்கும் கொலனி மக்கள்

இலங்கை கிரிக்கட் மீதான தடை நீக்கப்படும்!

பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடுகள் வௌியீடு