உலகம்

இந்தியாவில் ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா

(UTV|இந்தியா)- இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 333,008 ஆக அதிகரித்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 11,382 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 321 பேர் உயிரிழந்துள்ளனர் இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 169,689 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் 153,799 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Related posts

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ இந்தியா தயார்

ஈரான் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படும் புதிய சட்டமூலம்!

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்