உலகம்உள்நாடு

இந்தியாவில் உயிரிழந்த இளைஞனுக்கு MonkeyPox

(UTV |  கேரள மாநிலம்) – இந்தியாவில் உயிரிழந்த இளைஞருக்கு குரங்கு அம்மை (MonkeyPox) வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சனிக்கிழமை (ஜூலை 30) உயிரிழந்த இளைஞர் ஒருவர் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரள மாநிலம் திருச்சூரில் வசிக்கும் 22 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனை கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் நேற்று (ஜூலை 31) உறுதி செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பிய சில நாட்களில் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளைஞர் இறந்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட சோதனை முடிவில் இளைஞனுக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி, உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

“இளைஞருக்கு குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் எதுவும் இல்லை. மூளையழற்சி மற்றும் சோர்வு அறிகுறிகளுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உறவினர்கள் பரிசோதனை முடிவை சனிக்கிழமை அளித்தனர். “குரங்கு அம்மை நோயின் இறப்பு விகிதம் மிகவும் குறைவு, எனவே இந்த மரணம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

அதன்படி, மாநில சுகாதாரத் துறை அவரது மாதிரிகளை கேரளாவின் தேசிய வைராலஜி நிறுவனத்தின் ஆலப்புழா பிரிவுக்கு அனுப்பியது.

குறித்த இளைஞனின் இறுதிச்சடங்கு நோய்க்கான விதிகளின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அவரது நெருங்கிய நண்பர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை, இந்தியாவில் நான்கு குரங்கு அம்மை நோய்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் மூன்று கேரளாவில் இருந்து பதிவாகியுள்ளன.

Related posts

மகாநாயக்கர்களின் யோசனை குறித்து ஜனாதிபதி கடிதம்

வரவு-செலவு திட்டத்தை தோற்கடிப்போம்- சஜித் அணி சூளுரை

நாட்டில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.