உள்நாடு

இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அனுமதி

(UTV | கொழும்பு) – இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.

இதற்கமைய, இந்தியாவின் சீரம் நிறுவனம் மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு இடையில் கொரோனா தடுப்பூசி கொள்வனவுக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 18 நாட்களில் 1 இலட்சத்து 92 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சீரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 28 ஆம் திகதி நன்கொடையாக நாட்டுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, நேற்றைய நாளில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 3,589 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 92 ஆயிரத்து 938 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை பாடசாலைகளுக்கு பூட்டு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு

editor