உலகம்

இந்தியாவில் இரண்டாயிரத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்புகள்

(UTV|கொவிட்-19) – இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், வைரசின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,939 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 3,113 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 19,301 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அஸ்ட்ரா ஜெனகா தொடர்பில் WHO இனது நிலைப்பாடு

சினோவெக் தடுப்பூசி : அவசர பயன்பாட்டுகு அனுமதி

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் மரணம்