இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
மணிப்பூரில் இன்று (05) காலை 11.06 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவானது.
அடுத்ததாக மதியம் 12.20 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் 2 ஆவது நிலநடுக்கம் பதிவானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மணிப்பூரில் பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை மாநிலங்களான அசாம், மேகலாயாவிலும் உணரப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.