உள்நாடு

இந்தியாவிலிருந்து இலங்கை வந்த 163 மாணவர்கள்

(UTV|கொழும்பு)- உயர்க்கல்விக்காக இந்தியா மும்பை நகரில் தங்கியிருந்த 163 இலங்கை மாணவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL -144 விமானத்தின் ஊடாக இன்று(25) பிற்பகல் 2.35 அளவில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளில் இருந்தும், ஏற்கனவே மாணவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்னும் 20 நாட்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பில் உள்ளது

மைத்திரி மீதான தடை மேலும் நீடிப்பு!

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 60,425 பேர் கைது