விளையாட்டு

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்க?

(UDHAYAM, COLOMBO) – செம்பியன் கிண்ண தொடரில் இந்தியாவிற்கு எதிராக எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள போட்டியில் அனேகமாக இலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமால் நியமிக்கப்படலாம் என கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னாப்பிரிக்காவுடன் இடம்பெற்ற போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டமையால் அணித் தலைவராக இருந்த உபுல் தரங்கவிற்கு இரண்டு போட்டிகள் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் உபாதைக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலே மெத்தியூஸ் இந்தியாவுடன் இடம்பெறவுள்ள போட்டியில் விளையாடுவது உறுதியற்று காணப்படுவதாக இங்கிலாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இந்தியா அணியுடன் இடம்பெறவுள்ள போட்டியில் இலங்கை அணித் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.

Related posts

இலங்கை அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!

222 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை