உள்நாடு

இந்தியாவின் நன்கொடை மருந்துப் பொருட்கள் நாட்டை வந்தடைந்தது

(UTV | கொழும்பு) –இலங்கைக்கு 12.5 தொன் நிறையுடைய மருந்துப் பொருட்களை இந்தியா, நன்கொடையாக வழங்கியுள்ளது.

கொவிட் 19 தொற்றை தடுப்பதற்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் உபகரணங்களை உள்ளடக்கிய இந்த பொருட்களை
இலங்கையின் புதிய இந்திய உயர்ஸ் தானிகராக நியமனம்பெற்றுள்ள கோபால் பாக்லே நேற்று இலங்கைக்கு எடுத்துவந்தார்.

தினவாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.அவர் எடுத்துந்த இந்த நன்கொடை மருந்து பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படும் இந்தியாவின் நான்காவது நன்கொடையாகும்.

கடந்த மார்ச் 15 ஆம் திகதி சார்க் தலைவர்களுக்கிடையே நடைபெற்ற இணைய மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச தொற்று நோயான கொவிட்-19க்கு எதிராக இணைந்து போராடுவோம் என்று அறிவித்திருந்தார். இதற்கமைய நான்காவது தடவையாக மேலும் ஒரு தொகுதி மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

விசாரணை அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் கையளிப்பு

அநுராதபுரத்தில் 24 மணிநேர நீர் விநியோகம் தடை