உள்நாடு

இந்தியாவின் டிஜிட்டல் அடையாள அட்டை நிறுவனத்துடன் – இலங்கை ஒப்பந்தம்!

(UTV | கொழும்பு) –

இந்தியாவின் நன்கொடையின் கீழ் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை எனும் விசேட டிஜிட்டல் அடையாள அட்டை தயாரிக்கும் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஒப்பந்தம் கைச்சாத்திட இருக்கிறது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.ஐக்கிய தேசிய கட்சியின் தமைலையகமான சிறிகொத்தவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சுயதொழிலாளர்கள் அமைப்பின் 1,200 பேருக்கு ஐக்கிய தேசிய கட்சி அங்கத்துவம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் இந்தியாவின் நன்கொடையின் கீழ் எமது நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும்.விசேட டிஜிட்டல் அடையாள அட்டை (Unique Digital Identity) தயாரிக்கும் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஒப்பந்தம் கைச்சாத்திட இருக்கிறது. அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைக்காக 450 மில்லியன் இந்திய ரூபா இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோப்பால் பக்லே வழங்கி இருக்கிறார்.
இந்த வேலைத்திட்டத்துக்காக உலகில் உள்ள தகவல் தொழிநுட்பத்தின் பிரதான நிறுவனங்கள் பல எமது நாட்டுக்கு அதுதொடர்பான அறிவை இலவசமாக வழங்கி இருப்பதுடன், அதில் பில்கேட்ஸ் நிறுவனத்தின் நிறுவனமான பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் மன்றங்களும் உள்ளடங்குகின்றன.

இந்தியா தற்போது டிஜிட்டல் அடையா அட்டை ஒன்றை அந்த நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளதுடன், அதன் மாதிரி படிவத்துக்கமையவே எமது நாட்டு மக்களுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை ஒன்றை விநியோகிக்க இருக்கிறது. ஒரு நபரின் உயிரியல் தகவல் (இரத்த வகை முதலிய தகவல்கள்) உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அவருக்கான தனி இணையத்தள கணக்கில் சேமிக்கப்படும். குறி்த்த நபரின் அனுமதியுடன், வங்கிப் பரிவர்த்தனைகள் அல்லது பிற நிறுவனத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தத் தகவல்களை அனுப்பும் வசதியும் இந்த புதிய அடையாள அட்டையுடன் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

நபரொருவர் இந்த வழியில், தனது கடமை தேவையை மேற்கொள்வதற்காக குறித்த நிறுவனத்துக்கு செல்லாமல் இணையத்தளம் மூலம் மேற்கொள்ள முடியுமான வசதி கிடைக்கிறது.
முழு நாட்டையும் ஈ வலயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிந்தனைக்கமைய இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கபடுவதுடன் இந்திய அரசாங்கத்தின் பூரண அனுசரணையில் இடம்பெறும் எதிர்வரும் வருடம் இறுதியாகும்போது முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பதில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி அநுர முன்னிலையில் பதவிப்பிரமாணம்

editor

ரயில்வே திணைக்களத்தினால் அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்

யூனியன் பிளேஸில் வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து [VIDEO]