விளையாட்டு

இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்

(UTV | துபாய்) –  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற ஏ குழுவுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக மொஹமட் ரிஸ்வான் 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில் 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக விராட் கோலி 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் மொஹம்மட் நவாஸ் 33 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Related posts

இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 240

மரியா ஷரபோவா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி