உலகம்

இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்பு

(UTV|கொழும்பு)- சீனாவில் தோன்றிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகின்ற நிலையில், கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் சீனா இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து அமெரிக்கா அந்த வரிசையில் உள்ளது.

தற்போதையை நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1027 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை அமெரிக்காவில் 68 ஆயிரத்து 203 பேராக அதிகரித்துள்ளது

இன்றைய நிலவரப்படி இத்தாலியில் 7,503 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 4,089 பேர், சீனாவில் 3,287 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, இத்தாலிக்கு அடுத்ததாக கொரோனா தொற்றினால் அதிகமானவர்கள் உயிரிழந்த இரண்டாவது நாடாக ஸ்பெய்ன் பதிவாகியுள்ளது.

உலகளவில் இந்த வைரசால் 488,055 பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 22,049 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

குர்-ஆனை பாவிப்பது தொடர்பில் அரசு கொண்டுவரும் புதிய சட்டம்!

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை!

WhatsApp இற்கு புதிய வசதிகள்