இலங்கைக்கான இத்தாலி தூதுவர் டெமியானோ பிரான்கோவிக்கும் (Damiano Francovigh) தூதரகத்தின் பிரதி பிரதானி கலாநிதி ஆல்பர்டோ ஆர்க்கிடியாகோனோவிற்கும் (Alberto Archidiacono) இடையிலான விசேட சந்திப்பொன்றை இன்று (04) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் அலுவலகத்தில் நடத்த முடிந்தது.
இலங்கை, இத்தாலி மற்றும் ஐரோப்பா குறித்து ஒரு நாடாக நாம் மேலும் பல அம்சங்கள் தொடர்பில் ஆராய வேண்டும் என்பது இங்கு உணரப்பட்டது.
ஏனெனில் அந்நாடுகளில் இன்னும் பயன்படுத்தாத சாத்தியமான பரப்புகளும் புதிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
எமது தொழிற்துறைகள் மூலம் பெறுமானங்களை கட்டியெழுப்பிக் கொண்டால், உலகம் எங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தது.
அரசியலுக்கு அப்பாலும் நமது பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்தல் முன்னுரிமையளிக்கப்பட வேண்டியதோர் தேசிய பணியாகும்.
இதற்கு ஒற்றுமையும், தொலைநோக்குப் பார்வையும், அறிவார்ந்த ரீதியானதுமான நட்புரீதியானதுமான கூட்டாண்மைகளும் ஒரு நாடாக எமக்குத் தேவையாக காணப்படுகின்றன.