வகைப்படுத்தப்படாத

இத்தாலியில் பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் 26 பேர் பலி

(UTV|ITALY)-இத்தாலியின் ஜெனோவா நகரிலுள்ள நெடுஞ்சாலையில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில்,  குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், இந்தச் சம்பவத்தின்போது பல வாகனங்கள் வீழ்ந்ததில் மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அத்தோடு, இன்னும் 12 பேரைக் காணவில்லை எனவும் கூறப்படுகின்றது.

சம்பவ இடத்தில் சுமார் 300 மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடிபாடுகளுக்குள் இன்னும் மக்கள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுவதால் தொடர்ந்தும் மீட்புப் பணியை முன்னெடுப்பதாக ஜெனோவா பொலிஸ் பேச்சாளர் அலெஸ்ஸாண்டரா புக்கி (Alessandra Bucci) தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

 

Related posts

பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி

ඇෆ්ගනිස්තාන  නායකත්වය රෂිඩ් ඛාන්ට

Sixteen hour Water cut for several areas of Colombo