உலகம்

இது மிகவும் உணர்ச்சிபூர்வமான நாள் – போரிஸ் ஜோன்சன்

(UTV |  பிரித்தானியா) – பிரித்தானியா முழுவதும் இன்றைய தினம் பாடசாலைகள் மீளவும் திறக்கப்பட்டுள்ள நிலையில், இது மிகவும் உணர்ச்சிபூர்வமான நாள் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கை கொவிட்-19 பரவலில் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நிர்ணயிக்கப்பட்ட இலக்கு உரிய திகதிகளில் தளர்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் எச்சரித்து, தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“மார்ச் 29ம் திகதிக்கு முன்னரான வாரங்களில் கூடுதலான கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் தீர்மானிக்கும் போது “தரவுகள் மற்றும் திகதிகளை” அடிப்படையாக கொண்டே முடிவெடுக்கப்படும்“

நாங்கள் விவேகத்துடன் இருக்க வேண்டும். தடுப்பூசிகள் செலுத்துவதன் மூலம் நாங்கள் அதனை மேற்கொள்ள முடியும் எனவும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, பிரித்தானியாவில் கோவிட் – 19 தொற்றினால் மேலும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது நாளாகவும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 100க்கும் குறைவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 4,712 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 28ம் திகதிக்கு பின்னர் முதல் முறையாக நாளாந்த கோவிட் வழக்குகள் 5,000 க்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரித்தானியாவில் 22,377,255 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 1,142,643 பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், கோவிட் – 19 கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதால் வரவிருக்கும் வாரங்களில் நாளாந்த புள்ளிவிபரங்கள் உன்னிப்பாக அவதானிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வத்திக்கானில் நத்தார் தின சிறப்பு திருப்பலி

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு

ஓமான் கடலில் கப்பல் மூழ்கியதில் காணாமல் போன 9 பேர் மீட்பு