உள்நாடு

“இது நிவாரணங்களை வழங்கக் கூடிய நேரமல்ல”

(UTV | கொழும்பு) –  நாட்டில் தற்போது காணப்படும் நிலைமையானது மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக் கூட சந்தர்ப்பம் அல்ல என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் வரவு செலவுத்திட்டம் தொடர்பாக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

“இது நிவாரணங்களை வழங்கக் கூடிய நேரமல்ல. நாடு கொரோனா நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றது. எமது நாடு பெரிய கடன் சுமையில் இருக்கின்றது. டொலர் பற்றாக்குறை தொடர்பான நெருக்கடி இருக்கும் சந்தர்ப்பத்தில் மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து நிவாரணங்களையும் வழங்க முடியாமல் போயுள்ளமை குறித்து மிகவும் கவலையடைகின்றோம்” என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உறுதிச் சான்றிதழை ஒரே நாளில் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு.

திருகோணமலையில் நிலநடுக்கம்!

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு