சூடான செய்திகள் 1

இதுவே மக்களின் வாக்களிப்பு வீதம் குறைய காரணம்

(UTV|COLOMBO) அரசியல் வாதிகள் மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையே தேர்தல்களில் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கான முக்கிய காரணம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் அரசியல்வாதிகளை தெரிவு செய்த பின்னர், அந்த அரசியல்வாதிகள்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எண்ணுகிறார்கள்.
மக்களின் இவ்வாறான எண்ணம் சரியானதல்ல.
மக்கள் தெரிவு செய்யும் அரசியல்வாதிகள் மக்களின் ஆணைப்படி நடந்து கொள்ளாவிட்டால் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்க வேண்டும்.

இந்த நிலை மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி கேட்கும் நிலை உருவாகும் பட்சத்திர்லே தேர்தல் தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கை உருவாகும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 801 ஆக அதிகரிப்பு

கோட்டாபயவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

சஜித் ஜனாதிபதி நியாயப்படுத்தி ஐ.தே.கவை அவமதிக்கின்றார் – பொன்சேகா