உள்நாடு

இதுவரை 7,000 கர்ப்பிணிகள் கொரோனாவுக்கு பலி

(UTV | கொழும்பு) – இலங்கையில் இதுவரை 7,000 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 55 பேர் உயிரிழந்துள்ளனர் என குடும்ப சுகாதாரப் பிரிவின் பணிப்பாளரும் சமூக மருத்துவ நிபுணருமான வைத்தியர் சித்ரமாலி டீ சில்வா தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,

“.. இலங்கையில் இதுவரை 90 சதவீதமான கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது.

இதுவரை 55 கர்ப்பிணிகள் தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ள நிலையில், அனைத்து மரணங்களும் இந்த வருடம் மே மாதத்தின் பின்னரே இடம்பெற்றுள்ளது. அத்துடன் இவ்வாறு உயிரிழந்த அனைத்து கர்ப்பிணிகளும் எவ்வித தடுப்பூசியையும் பெறாதவர்கள் என்பதுடன், வரலாற்றின் முதற்தடவை அதிகளவு கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர்..” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

ஜனாதிபதி மற்றும் பங்களாதேஷ் பிரதமருக்கிடையிலான சந்திப்பு!

அதிவலு கொண்ட மின்சாரக் கம்பி அறுந்து வீழ்ந்ததில் இருவர் பலி

அடக்குமுறை அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட வேண்டும்