உள்நாடு

இதுவரை 176 கடலாமைகள் உயிரிழப்பு : சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – MV Xpress pearl கப்பல் தீ விபத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக இதுவரை 20 திமிங்கிலங்கள், 4 சுறாக்கள் மற்றும் 176 கடலாமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்துள்ளார்.

கப்பல் தீப்பற்றி எரிந்த சம்பவத்துடன் தொடர்புடைய முறைப்பாடு இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துச் கொள்ளப்பட்ட போது குற்றப்புலானாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் நாயகம் மாதவ தென்னகோன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த மரணங்கள் மழை காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என சிலர் கூறியிருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என அரச பிரதி சொலிசிட்டர் நாயகம் தெரிவித்தார்.

குறித்த இறப்புக்கள் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றி எரிந்ததன் ஊடாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக இடம்பெற்றுள்ளதாக கடல் மாசு தடுப்பு அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட 39 பேர் அடங்கிய குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விலங்குகளின் மரணங்கள் தொடர்பில் நாடு பூராகவும் உள்ள 26 நீதிமன்றங்களில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த விலங்குகளின் உடல் பாகங்கள் பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும பிரதி சொலிசிட்டர் நாயகம் அறிவித்துள்ளார்.

Related posts

வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்

கொவிட் தடுப்பூசிக்கு அரசு 425.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

NGOக்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தினால் ஆபத்து?