உள்நாடு

இதுவரையில் 1,67 000 இற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி

(UTV | கொழும்பு) –    நாட்டில் கடந்த 11 நாட்களில் 1 இலட்சத்து 67 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சீரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 28 ஆம் திகதி நன்கொடையாக நாட்டுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, நேற்று(08) மாத்திரம் நாடளாவிய ரீதியில் 5,989 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 67 ஆயிரத்து 762 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்ட தரப்பினருக்கே தற்போது கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டு மூன்று வாரங்களில் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சர்வதேச கிரிக்கட் பேரவையின் மூத்த அதிகாரிகளை சந்தித்த பிரதமர் ஹரினி

editor

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

editor

ஒட்சிசன் விநியோகம் வழமைக்கு