உள்நாடுசூடான செய்திகள் 1

இதுவரையில் 114 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் 02 பேரினால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படை வீரர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2080 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1955 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, 114 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கேரள கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

MV XPress Pearl கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை

ஜனாதிபதி ரணில் பொய் சொல்கிறார்